SHIVO HUM

ஒன்றேயாம் சிவம்
இரண்டாம் சிவ சக்தியாகி
மூன்று மூர்த்திகளாய் மூன்று சக்திகளாய்(இச்சா,க்ரியா,ஞான)
நான் மறை வேதங்களாய்,
பஞ்ச பூதங்களாய்,பஞ்ச இந்திரியங்கள் உணர் பஞ்ச தன் மாத்திரைகளாய்,
ஆறு சக்கரத்துள் எழும் குண்டலினியாய் ,
ஏழு ஸ்வரங்களுள் நாதமாய்
அஷ்டமா சித்திகளாய் அஷ்ட திக்கெங்கும் நிறைந்து,
ஒன்பது வாயில் மாந்தர் உள்ளத்து உணர் மெய்ப்பொருளாய்,
பூஜ்ஜியமாய் என்னை உன்னுள் அடக்கி,
எல்லையில்லா ஆனந்தமாய் அனந்தமாய் என்னுள் நிறைந்தவனே…சிவோஹம்.

… வேத வித்யாம்பா சரஸ்வதி

VANAKKAM

இறையாண்மை நிறை இந்திய மண்ணில் இருக்கரம் குவித்து தலை வணங்கி ஒருவரை ஒருவர் வாழ்த்தும் முறை தொன்று தொட்டு வழக்கில் உள்ளது.

வணக்கம் என அழகிய தமிழிலும், நமஸ்காரம்,நமஸ்தே என தெய்வீக சமஸ்க்ருதத்திலும் அர்த்தமுள்ள வார்த்தைகள் வழக்கில் உள்ளன.

நமஸ்தே அல்லது நமஸ்காரம் எனும் போது சாஸ்ஷ்ட்டாங்க நமஸ்காரம் எனவும் பொருள் கொள்ளலாம்.

நம: + தே= நமஸ்தே

நம: = வணங்குகிரேன்

தே = உமக்கு

இதன் உள்ளர்த்தம் உன்னுள் உள்ள இறைவனை வணங்குகிரேன்.

Good morning..நற்காலை என்பது பொதுவாக அந்த நேரத்திற்கான ஒரு சொல்தான்.வணக்கம் காலை மாலை என காலத்திற்கு உட்பட்டதா?

பெரியவர்- சிறியவர் , ஆண்- பெண்,மனிதர்கள் – தேவர்கள்,காலை – இரவு பேதமின்றி நம்முள்ளும் பதிந்து அலை இயக்கமும் ஏற்படுத்தி அனைவரும் ஒன்றே எனும் ஆத்ம ஞானம் அழகிய சொற்களான வணக்கம்,நமஸ்காரம்,நமஸ்தே இவற்றை பயன்படுத்தலாமே.

நாம் ஒரு நாளில் எத்தனை முறை ‘ஹலோ ‘என்று சொல்லுகின்றோம்..யாரோ ஒருவரின் மனைவியின் பெயரை (தொலைப்பேசியை கண்டுபிடித்தவரின் மனைவியின் பெயர் ஹலோ) நாம் ஏன் பலமுறை சொல்லவேண்டும்?

மாற்றம் இன்று தேவை….

வணக்கம்,

நமஸ்கார்…

நமஸ்தே…இறை தன்மை எங்கும் மிளிரட்டும்…

ஹரி ஓம்..

-மாதா வேத வித்யாம்பா சரஸ்வதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *